Azhagiya manavalan's Blog

Arulpaalipu
கண்டவரை மெய் சிலிர்க்க வைக்கும் அழகிய திருமேனியாள் அருள் பாலிப்பாய்

கார்மேக வண்ணனாய் கடாக்ஷித்த நின் திரு விரலால் அருள் பாலிப்பாய்

கிரகங்களை ஒன்றுமில்லாமல் செய்த பிரளய ஸ்வரூபத்தால் அருள் பாலிப்பாய்

கீர்த்தி நிறைந்துள்ள பரமபத நாதனாய் அருள் பாலிப்பாய்

குழலினை இனிமையாய் வாசித்த வாயால் அருள் பாலிப்பாய்

கூர்ந்த திருக்கண்களால் அரங்க நகரில் இருந்தே எனக்கு அருள் பாலிப்பாய்

கெட்ட மதியினருக்கு நன்மதி புகட்டி அருள் பாலிப்பாய்

கேட்டவருக்கு அள்ளித் தரும் வள்ளல் குணத்தால் அருள் பாலிப்பாய்

கைத்தலம் பற்றிய நாச்சிமார்களுடன் அருள் பாலிப்பாய்

கொடுகு மலையில் இருந்து வரும்

அன்னைக்காவிரியின் நடுவே இருந்து அருள் பாலிப்பாய்

கோடி புண்யம் தரும் திருவரங்க சந்நிதியில் சயனித்து அருள் பாலிப்பாய்

கௌஸ்துப மாலை அணிந்து நம்பெருமாளாய் அருள்

பாலிப்பாய்

அடியாள் க்ருஷ்ண ப்ரியா

ஒவ்வொரு வரியிலும் முதல் எழுத்தினை கவனிக்கவும்

நடையழகனான உன்னைத் தாங்கும் தோளுக்கினியானுக்கு                   நமஸ்காரம்!

நான் மறைகள் போற்ற பள்ளி கொண்ட உந்தனுக்கு நமஸ்காரம்!

நிந்தன் அருளுக்கு கற்பூரமாய் இருந்து உதவும் பட்டர்களுக்கு நமஸ்காரம்!

நீள் மதிள் அரங்க நகரைச் சுற்றி வரும் ஸ்ரீபாதம் தாங்கிகளுக்கு நமஸ்காரம்!

நுன்தன் புகழ் போற்றிய ஆழ்வார்கள் பதின்மருக்கு நமஸ்காரம்!

நூற்றுக் கணக்கில் குவியும் பக்தர்களுக்கு நமஸ்காரம்!

நெடிய அழகிய விழிகளால் அருள் சுரக்கும் உன் கண்களுக்கு நமஸ்காரம்!

நேராக பாய்ந்து வரும் அன்னை காவிரிக்கு நமஸ்காரம்!

நைவேத்தியம் செய்ய வீண்டி உணவு தயாரிக்கும் பரிசாரகர்களுக்கு நமஸ்காரம்!

நொறுங்கி மனமுடைபவர்களுக்கு ஆத்மாவை   இருந்து உதவும் அந்தர்யாமிக்கு  நமஸ்காரம்!

நோன்பிருந்த ஆண்டாளை ஜோதி ஸ்வரூபமாக கொண்டதால் திரு தீபத்திற்கு நமஸ்காரம்!

எந்தத் திருவிளையாடலைச் சொல்வேன் அரங்கநாதனே?

மண்ணை உண்டத் திருவிளையடலையா?

மாரிசனைக் கொன்றத் திருவிளையாடலையா ?

மிடுக்காக நடை போடும் நின் திருவிளையாடலையா?

மீன் ஆக அவதரித்த திருவிளையாடலையா?

முக்கொடவர்களை ஆட்கொண்ட திருவிளையாடலையா?

மூலவ மூர்த்தி என் பெரிய பெருமாளாய் சயனித்து செய்த திருவிளையாடலையா?

மெருகுக் குறையாமல் செய்யும் உனது திருவிளையாடலையா?

மேன்மேலும் உதிர்க்கும் உனது கருணைத் திருவிளையாடலையா?

மையல் கொள்ள வைக்கும் உன் அழகுத் திருவிளையாடலையா?

மொட்டு போல மலரும் உன் திருமுகத் திருவிளையாடலையா?

மோக்ஷம் தரும் திருவிளையாடலையா?

மௌவல் மாலை அணிந்தத் திருவிளையாடலையா?

எந்தத் திருவிளையாடலைச் சொல்வேன் அரங்கநாதனே

நம்பெருமாள் திருவடிகளே சரணம்

Our sangeetha upanyasam

INFORMATIVE NEWS ABOUT THIRUPPATI
அறிந்து கொள்வோம்.

திருப்பதி செல்கிறோம், திருவேங்கடமுடையான் ஏழுமலை வாசனை வணங்கி மகிழ்கின்றோம். ஆனால் திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றிவ் சிலவற்றை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில………

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிக பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் ” வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை

திருப்பள்ளியெழுச்சி
Being Marghazhi month I am blessed by the experienced elders like you for writing the great work of THONDAR ADI PODI AALWAR as well as AANDAL

Adiyaval

krishnapriya

தமேவ மத்வா பரவாசு தேவம் ரங்கேசயம் ராஜவதர்ஹநீயம் ப்ரபோதிகீம் யோக்ருதிசுக்தி மாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்த மீடே.

யாவரொரு அழ்வார் பூஜிக்கத்தக்கவராய் திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்பவரான பெரியபெருமாளை ஸாக்ஷாத் பரவாசுதேவனாகவே பிரதிபத்தி செய்து, திருபள்ளியுணர்த்துமதான திவ்யப்ரபந்தத்தை அருளிச்செய்தரோ அப்படி பட்ட ஞானம் முதலிய குணங்கள் அமைந்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரை நான் வணங்குகின்றேன்.

மண்டங்குடிஎன்பர் மாமறையோர் மன்னியசீர் தொண்டரடிப்பொடி தொன்னகரம்                                                                                      வண்டுதிணர்தவயல் தெனரங்கதம்மானை பள்ளியுனர்த்தும் பிரானுதித்தவூர்

வண்டுகளானவை நெருங்கிப்படிந்திருகப்பட்ட கழனிகள் சூழ்ந்த அழகிய திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெரிய பெருமாளை பள்ளி எழுப்புவதற்கு தொண்டரடிப்பொடி என்னும் திருநாமம் உடைய ஆழ்வார் திருமண்டன்குடி என்கின்ற ஊருக்குச் சொந்தமுடைய ஆழ்வார் பாடுகின்றார்தமேவ மத்வா பரவாசு தேவம் ரங்கேசயம் ராஜவதர்ஹநீயம் ப்ரபோதிகீம் யோக்ருதிசுக்தி மாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்த மீடே.  யாவரொரு அழ்வார் பூஜிக்கத்தக்கவராய் திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்பவரான பெரியபெருமாளை ஸாக்ஷாத் பரவாசுதேவனாகவே பிரதிபத்தி செய்து, திருபள்ளியுணர்த்துமதான திவ்யப்ரபந்தத்தை அருளிச்செய்தரோ அப்படி பட்ட ஞானம் முதலிய குணங்கள் அமைந்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரை நான் வணங்குகின்றேன். மண்டங்குடிஎன்பர் மாமறையோர் மன்னியசீர்தொண்டரடிப்பொடி தொன்னகரம் வண்டுதிணர்தவயல் தெனரங்கதம்மானை பள்ளியுனர்த்தும் பிரானுதித்தவூர்  வண்டுகளானவை நெருங்கிப்படிந்திருகப்பட்ட கழனிகள் சூழ்ந்த அழகிய திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெரிய பெருமாளை பள்ளி எழுப்புவதற்கு தொண்டரடிப்பொடி என்னும் திருநாமம் உடைய ஆழ்வார் திருமண்டன்குடி என்கின்ற ஊருக்குச் சொந்தமுடைய ஆழ்வார் பாடுகின்றார்

கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்

கன இருள் அகன்றது காளையம் பொழுதாய்

மது விருந்தொழுகின மாமலரெல்லாம்

வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி

எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த

இருங்களித்தீட்டமும் பிடியொடும் முரசும்

அதிர் தலில் அலைக் கடல் போன்றுள தெங்கும்

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!

-தொண்டரடிப்பொடி ஆழ்வார்

கதிரவன் – சூரியன்

குணதிசை – கீழ் திசை

வானவர் அரசர் – தேவர்கள்

எதிர் திசை – தெற்கு திசை

களிறு – ஆண் யானை

பிடி – பெண் யானை

முரசு – வாத்தியம்

இத்திருப்பள்ளிஎழுச்சியின் உரை

அரங்கராஜனே, சூரியனானவன் கிழக்கு திக்கில் உதித்துவிட்டான். இரவு பொழுதின் அடர்ந்த இருள் அகன்று காலைப் பொழு புலர்ந்து விட்டது. சிறந்த மலர்களெல்லாம் விகாசம் அடைந்துவிட்டது. தேவர்களும், அரசர்களும் திரண்டு உன் திருக்கண்கள் நோக்கிய தெற்கு திக்கில் கூடிவிட்டனர். ஆண் யானைகளும், பெண் யானைகளும், வாத்தியங்களும் சேர்ந்து ஒலிக்கின்ற போது அலைகளை உடைய கடலை ஒத்திருந்தது. எனவே இனியும் பள்ளியில் (சயனத்தில்) இருக்கலாகாது. நீ விரைவில் எழுந்து அருள்வாயாக.

கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவி

கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ

எழுந்தன மலரணை பள்ளிகொள் அன்னம்

ஈன்பனி நனைந்தது அமிரும் சிறகுதறி

விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்

வெள்ளை இருஅர்வம்தான் விடதினுக்கணுங்கி

அழுங்கிய ஆனையின் அருதுயர் கெடுத்த

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!

- தொண்டரடிப்பொடி ஆழ்வார்

கொழுங்கொடி – செழுமைத் தங்கிய கொடி

அன்னம் – ஹம்சபறவை

இத்திருபள்ளிஎழுசியின் உரை

செழுமை தங்கிய கொடியை உடையதான முல்லை செடியில் உண்டான அணைந்து கொண்டு இதோ வீசா நின்றது. புஷ்ப சயனத்திலே உறங்குகின்ற ஹம்சங்கள், சொரிகின்ற பனியாலே நனைந்த தங்கள் அழகிய சிறகுகளை உதறிக்கொண்டு உறக்கம் விட்டு எழுந்தன. வெளுத்த கோரப்பற்கள் உடைய முதலை தன் வாயால் கஜேந்திரனான யானையைக் கடித்தது. அம்முதலையின் பல் விஷத்திற்கு மிகவும் நோவு பட்ட கஜேந்திராழ்வனின் சம்சாரம் என்ற தூக்கத்தை போக்கி ஆதிமூலம் என்ற விடிவை ஏற்படுத்திய அரங்கனே நீ பள்ளி எழுந்தருளாய்.

சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம்

துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி

படரொளி பசுத்தனன் பனிமதி இவனோ

பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்

மடலிடை கீறிவண் பாளைகள் நாற

வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ

அடலொளிதிகழ் தரு திகிரியந்தடக்கை

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!

-தொண்டரடிப்பொடி ஆழ்வார்

சுடரொளி – சூரிய ஒளி

பொழில் – சோலை

இத்திருபள்ளிஎழுச்சியின் உரை

கண்ட இடமெங்கும் சூரியனின் கதிர்கள் பரவிவிட்டது. மிக தேஜஸ் உடைய நக்ஷத்திரங்கள் குறைவு பட்டதும் இன்றி, குளிர்ச்சி தரும் சந்திரனானவன் ஒளி மங்குகின்றான். பரந்த இருட்டானது நீங்கிவிட்டது. இந்த விடியல் காற்றானது சோலைகளிலுள்ள பாக்குமரங்களிடையே மடலைக்கீற அதனாலே அழகிய பாளைகளானவை பரிமளிக்க அப்பரிமளத்தை முகர்ந்துகொண்டு அவை வீச நின்றது. பெருத்த மிடுக்கையுடையத்தாய் தேஜஸ் விளங்கா நின்றுள்ள திருவாழியாழ்வானை அழகிய திருக்கையிலே உடைய அரங்கத்தம்மா பள்ளிஎழுந்தருள்வாய்!

புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்

போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி

கலந்தது குணதிசை கனைகடல் அரவம்

களிவண்டும் இழற்றிய கலம்பகம் புனைந்த

அலங்கலன்தொடையல் கொண்டடியினைப் பணிவான்

அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா

இலாங்கையர்கோண் வழிபாடு செய்கோயில்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

- தொண்டரடிப்பொடி ஆழ்வார்

புட்கள் – பறவைகள்

கங்குல் – இரவு

புலரி – காலை, விடியல்நேரம்

குணதிசை – கிழ்க்கு திசை

அமரர்கள் – தேவர்கள்

இத்திருபள்ளிஎழுச்சியின் உரை!

பூத்திராநின்ற சோலையிலுள்ள பறவைகள் ஆரவாரம் செய்யா நின்றது; இரவானது கழிந்து காலைப் பொழுது வந்துவிட்டது. கிஇழ் திசையில் கோஷஞ்செய்யக்கூடிய கடலினுடைய ஓசையானது வியாபித்தது; தேனைப் பருகிக் களிக்கின்ற வண்டுகளானவை சப்தியாநின்றன; பலவகைப் பூக்களாலே தொடுக்கப்பட்ட அழகிய அலங்கல் மாலைகளை ஏந்திக்கொண்டு தேவர்கள் தேவரீருடைய திருவடிகளில் பணிமாறுகைக்காக வந்து நின்றார்கள்; ஆகையாலே சர்வ ஸ்வாமின்! லங்கேஷ்வரனான விபீஷணழ்வன் தாஸவ்ருத்தி பண்ணப்பெற்ற கோயில் எம்பெருமானே நீ பள்ளி எழுந்தருள்வாயாக!

இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ

இறையவர் பதினோரு விடையரும் இவரோ

மருவிய மயிலினன் ஆறுமுகன் இவனோ

மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி

புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்

குமார தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்

அருவரையனை நின் கோயில் முன்னிவரோ

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!

-தொண்டரடிப்பொடி ஆழ்வார்

இரவியர் – பன்னிரண்டு தேவர்களும்

பதினோரு விடையர் –  ஏகாதச ருத்ரர்கள்

மயிலினன் – மயில்வாஹனன்

மருதர் – மருதகணங்களான ஒன்பது பேர்

வசுக்கள் – அஷ்ட வசுக்கள்

இத்திருப்பள்ளிஎழுச்சியின் உரை

விலக்ஷணமாய் பெரிதான தேரோடு பன்னிரண்டு ஆதித்தர்களும் ஜகத்துக்கு நிர்வாகர்களான ஏகாதச ருத்ரர்களும் பொருந்திய மயில் வாகனம் உடைய சுப்ரமணியனும் மருதகனங்களும் அஷ்டவசுக்களும் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு வந்து நெருங்கி நிற்க, பாட்டும் கூத்துமாய் தேவசேனா சமூகங்கள் வந்து புகுந்த பின் நெருங்கி நின்ற கூட்டமானது மலையைப் போல் கட்சி அளித்தது. ஆகவே இவர்களை நோக்க அரங்கத்தம்மா நீ பள்ளி எழுந்தருள்வாயாக!

அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ

அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ

இந்திரன் ஆனையும் தானும் வதிவனோ

எம்பெருமான் உன் கோயில் வாசல்

சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க

இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவன்

அந்தரம் பாரிடமில்லை மற்றிதுவோ

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

-தொண்டரடிப்பொடிஆழ்வார்

அந்தரத்தமரர்கள் – தேவர்கள்

அருந்தவமுனிவர் – (அருமை+தவம்+முனிவர்) -சனகாதியர்

இத்திருப்பள்ளிஎழுச்சியின் உரை

ஸ்வாமின்! தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே தேவேந்த்ரனும் ஐராவத யானையும் வந்திருப்பதும் அன்றி அண்டத்துக்குள் இரா நின்ற தேவர்களும் இவர்களுடைய பரிவாரங்களும் மஹாதபஸ்வியான ஸநகாதி முனிவர்களும் மருத கணங்களும் யக்ஷர்களும், கந்தர்வர்கள் நெருக்கவும் வித்யாதரர்கள் தள்ளவும் செய்தார்கள். ஏனெனில் தேவரீருடைய திருவடி தொழுவதற்காக மயங்கி நின்றனர். இந்த கட்சியைக் கண்ட ஆகாசமும் பூமியும் அவகாசம்ற்றிரா நின்றது. எனவே அரங்கத்து அரவணையில் பள்ளி கொண்டவா நீ எழுந்தருள்வாயாக!

ஏதமில் தண்ணுமை எக்கம்மத்தளி

யாழ்குழல் முழவமோடு இசை திசை கெழுமி

கீதங்கள் பாடினர் கின்னரர் கருடர்கள்

கந்தர்வர்வர் கங்குலுள்  எல்லாம்

மாதவர் வானவர் சாரணர் இயக்கர்

சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவன்

ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம்  அருள

அரங்கத்தம்மா பளிய் எழுந்தருளாயே!

-தொண்டரடிப்பொடி ஆழ்வார்

ஏதம் இல் – ஏதம் (குற்றம்) இல்லா

(முற்று பெறாத சொல்)

இத்திருப்பள்ளி எழுச்சியின் உரை

குற்றமற்ற சிறுபரையும், ஒற்றைத் தந்தி உடைய வாத்தியமும் மத்தளமும், வீணையும், புல்லாங்குழல்களுமாய் திக்குகள் எங்கும் இவைகளின் முழக்கத்தோடு பட்டு பாட கடவரான கின்னரர்களும், கருடர்களும், கந்தர்வர்களும் மற்றவர்களும் தேவர்களும், மஹரிஷிக்களும் சாரணர்களும், யக்ஷர்களும், சித்தர்களும் தேவரீர்களுடைய திருவடிகளை வணங்குவதற்காக இரவெல்லாம் மோஹம் உற்றனர். ஆகையாலே அவர்களுக்கு பகலிலே காட்சி அருள்வதற்காக அரங்கத்தம்மா நீ பள்ளி எழுந்தருள்வாயாக!

கடி மலர் கமலங்கள் மலர்ந்தனன் இவையோ

கதிரவன் கனைக்கடல் முளைத்தனன் இவனோ

துடியிடையார் சுரிக்குழல் பிழிந்துதறித்

துகிலோடு தேறினார் சூழ்புனல் அரங்கா

தொடையுற்ற துளவமும் கூடையும் பொலிந்து

தோன்றிய தோள் தொண்டரடிப்போடிஎன்னும்

* அடியனை அளியனென்று அருளி உன் அடியார்க்கு

ஆட்பாடுத்தாய் பள்ளி எழுந்தருளாயே!

-தொண்டரடிப்பொடி ஆழ்வார்

கடி – வாசனை

இத்திருப்பள்ளிஎழுச்சியின் உரை

திருக்காவிரி தீர்த்தத்தாலே சூழ்ந்து உள்ள ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கத்தில் கண்வளர்ந்து அருளாமவனே! பரிமலமுடைய தமரைப்பூக்கலானவை மலர்ந்து விட்டன; சூரியனானவன், கோஷஞ் செய்கையையே இயல்பாக கொண்ட கடலின் உதயகிரியிலே தின்றினான்; உடுக்கைப் போன்ற இடை உடைய மாதர் தமது சுருண்ட முடியை நீர் பசியாற பிழிந்து உதறி விட்டுகே கொண்டு தம் தம் ஆடைகளை உடுத்திக் கொண்டு கரைஏரிவிட்டார்கள்; ஒழுங்காக தொடுக்கப்பெற்ற திருத்துழாய் மாலையையும் பூக்குடலையும் விளங்கா நிர்கப்பெற்ற தோளையுடைய தொண்டரடிப்பொடி என்ற பெயருடைய தாசனை ‘திருவுள்ளம் பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கிஇகரித்து அருளி தேவரீருடைய நித்யகிங்கரர்களான பதவிக்கு ஆளாக்க வேண்டும்.

திருப்பள்ளிஎழுச்சி மற்றும் அதன் உரை முற்றிற்று.

அரங்கன் திருவடிகளே சரணம்

அடியாள்

கிருஷ்ணப்ரியா

(nadaiazhagan@gmail.com)

Thiruppavai
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு

செய்யும் கிரிசைகள் கேளிரோ பாற்கடலுள்

பையத்துயின்ற பரமனடி பாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டெழுதோம் மலரிட்டு நாமுடியோம்

செய்யதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம் பாவாய்!

-ஆண்டாள்.

வையம் – உலகம், பூமண்டலம்

உகந்து – மகிழ்ந்து

கிரிசைகள் – கிரியைகள்

தீக்குறள் – கொடிய சொற்கள்

இத்திருப்பவையின் உரை!

இப்பூமண்டலத்தில் வாழ்ந்திரா நின்றுள்ளவர்களே!எம்பெருமானாலேயே பேறு என்ற அத்யவசாயமுடைய நாமும் உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் அவதானத்துடன் கன்வலர்த்து அருளா நின்ற

பரமபுருஷனுடைய திருவடிகட்கு மங்களாசாசனம் பண்ணி ஆச்சர்யாதிகளுக்கு இடுகையாகிற ஐயத்தையும், ஆர்த்தர்கட்கு இடுகை இடுகிற பிக்ஷியையும் சக்தி உள்ள மட்டும் இட்டு மகிழ்ந்து நமது நோன்புக்கு அங்கமாகச் செய்யவேண்டிய கிரியைகளை காதுகொடுத்துக் கேளுங்கள். நோன்பு நோற்க தொடங்கிய நாம், நெய் உண்ணக்கூடாது . குழலில் பூ வைக்கக் கூடாது. மேலைத் தலைவர்கள் செய்யாதவற்றை செய்யக் கூடாது. கொடிய கோட்சொல்லை எம்பெருமாநிடத்துச் சென்று கூற கடவோம் அல்லோம்.

மார்கழி – 3ஆம் திருநாள்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெரும் செந்நல் ஊடு கயலுகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைப் பற்றி

வாங்க குடம்நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்

திங்கள் – மாதம்

மாரி – மழை

செந்நல் – செம்மை+ நெல்

இத்திருப்பவையின் உரை:

மகாபலி வார்த்த நீர்கையில் விழுந்தவாறே ஆகாசத்தளவு வளர்ந்து, மொன்று லோகங்களையும் உன் திருவடிகளாலே அளந்துகொண்ட புருஷோத்தமனுடைய திருநாமங்களை நாம் பாடி, நம் நோன்புக்கென்று சங்கல்பித்துக் கொண்டு, நிரடினால் தேசமெங்கும் தீங்கு ஒன்றுமில்லாமல் மாதம் தோறும் மூன்று முறை மழைப் பெய்ய (மூன்று நாள் மழையும் 27 நாள் வெய்யிலும் சமமான வானிலை என்று இவ்விடத்தில் ஆண்டாள் நமக்கு தெரிவிக்கின்றாள்) அதனால் வானமளவில் உயர்ந்து காணப்படும் செம்மையான நெற்பயிர்களின் இடையே மீன்கள் துள்ள, அழகிய நெய்தல் மலரில் மிக்க புகரையுடைய வண்டுகளானவை உறங்க, மாட்டுத் தொழுவில் புகுந்து சலியாமல் பொருந்தியிருந்து, பசுக்களின் பருத்த முலைகளை இரு கைகளாலும் இழுக்க, உதார சுபாவமுடைய பெரிய பசுக்கள் நீங்காத சம்பத்து நிறையும்படி பால் வெள்ளத்தலே குடங்களை நிரப்பின!

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகர்ந்து கொடு ஆர்த்து ஏறி

உழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து

பாழியன் தோளுடை பத்மநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்.

கரவேல் – கையில் ஏந்திய வேல்.

ஆழியுள் புக்கு – கடலில் புகுந்து.

ஆர்த்து – கர்ஜனை.

இத்திருப்பவையின் உரை:

மண்டல வர்ஷத்துக்கு தலைவனான பர்ஜன்யனே! நீ உன்னுடைய கோடையில் ஒன்றையும் ஒளியது ஒழிய வேண்டும்; நீ செய்யவேண்டிய பணி என்னவென்றால், கடலினுள் புகுந்து அங்குள்ள நீரை மொண்டு கொண்டு வந்து, கர்ஜனை செய்து ஆகாயத்தே ஏறி காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனான எம்பெருமானுடைய திருமேனி போல் உனது திருமேனியில் கருமைப் பெற்று பெருமையும் அழகும் பொருந்திய தோள்களை உடையவனும், நாபிக் கமலம் உடையனுமான எம்பெருமானுடைய கையில் வலப்பக்கத்திலுள்ள திருவாழி யாழ்வானைப் போல் ஒளி மல்கி இடப்பக்கத்திலுள்ள பாஞ்சஜஞாழ்வானைப் போல் நிலை நின்று முழங்கி, ஸ்ரீ சார்ங்கத்தாலே தள்ளப் பட்ட பானவர்ஷம்போல், உலகத்தார் அனைவரும் வாழும்படியாகவும் கன்னபிராநோட்ட கலவிக்கு நோன்பது நோற்கிற நாங்களும் சந்தோஷித்து மார்கழி நீராட்டம் செய்யும்படியாகவும் இவ்வுலகத்தில் தாமதம் செய்யாமல் மழைப் பொழிவாயாக!

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயைக் குடல் விளக்கம்செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!

- ஆண்டாள்

மாயன் – மாயச் செயல்கள் செய்பவன்

துறைவன் – நிருபமாக உடையவன்.

குடல் – வயிற்றுப் பகுதி.

செப்புதல் – சொல்லுதல்.

இத்திருப்பவையின் உரை!

மாயச் செயல்களைச் உடையவனும் வடமதுரைக்குத் தலைவனும், பரிசுத்தமாய் ஆழம் மிக்கிருக்கிற தீர்த்தத்தை உடைய யமுனை ஆற்றங்கரையை நிரூபமாக உடையவனும், தாயாகிய தேவகி பிராட்டியின் வயிற்றை விளங்கச் செய்தவனுமான கண்ணபிரானை நாம் பரிசுத்தியுள்ளவர்களாய்க் கிட்டி நல்ல மலர்களைத் தூவி வணங்கி வாயாரப்பாடி நெஞ்சார தியானம் பண்ண, அதன் பிறகு சேஷ சேஷிபாவ ஞானமுண்டாவதற்கு நாம் முண்பது செய்த பாவங்களும், செய்துகொண்டிருக்கும் பாவங்களும், செய்யப்போகும் பாவங்களும் தீயிலிட்ட பஞ்சு போல் உருமாய்ந்து போகும்; ஆகையாலே அவ்வெம்பெருமான் திருநாமங்களைச் சொல்.

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

-ஆண்டாள்

புள் – பறவை.

அரையன் – தலைவன்.

அரவம் – ஒலி..

இத்திருப்பாவையின் உரை!

பறவைகளும் இரை தேடுகைக்காக எழுந்து ஆரவாரங்கள் செய்கின்றன; பரவித் தலைவனான பெரிய திருவடியாகிய கருடனுக்கு ஸ்வாமியான சர்வேஷ்வரனுடைய சந்நிதியில் வெண்மைநிறமுடையதும் அனைவரையும் அழிய நிற்பதுமான சங்கினுடைய பேரொளியையும் செவிப்படுத்துகின்றில்லையோ?

பகவத் விஷயரசம் அறியப்படாத பெண்ணே! எழுந்திரு; பூதனையின் மூலையில் தடவிக்கிடந்த விஷத்தை அவளது ஆவியுடன் அமுது செய்து வஞ்சனை பொருந்திய அசுர விஷ்டமான சகடமானது கட்டுக் குழையும் படி திருவடியை ஓங்கச் செய்தவனும் திருப்பாற்கடலில் திருஅனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்து அருளின ஜகத்கார பூதனுமான எம்பெருமானை ரிஷிகளும் யோக பயிற்சியில் ஊன்றினவரும் தமது ஹ்ருதயத்தில் அமர்த்திக்கொண்டு ஹ்ருதயஸ்தனான அவ்வெம்பெருமான் அசையாத படி சாவதாநமாக எழுந்து ‘ஹரிர் ஹரி’ என்ற பேரொலியானது எமது நெஞ்சில் புகுந்து குளிர்ந்தது.

நாமும் சென்று அந்த ஹரியை தொழுவம். ஏ  தோழி நீ உறங்கலாகது.

கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேயப் பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து

வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ

நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ

தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!

- ஆண்டாள்

பேய்பெண் – அறிவில்லாத பெண்.

பிறப்பு- ஆமைத்தாலி.

பேர்த்து- அசைத்து.

இத்திருப்பாவையின் உரை!

ஏ மதிகெட்ட பெண்ணே! எல்லாவிடத்திலும் பாரத்வாஜ பக்ஷிகளானவை ஒன்றோடொன்று ஸம்ச்லேக்ஷித்து கீச்சுகீசென்று பேசிய பேச்சினுடைய ஆரவாரத்தை இன்னும் நீ கேட்க்கவில்லையோ? பரிமள வஸ்துக்களினால் மணம் கமழா நின்றுள்ள கூந்தலையுடைய இடைப்பெங்கள் கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் கலகலவென சப்திக்கும் படியாக கைகளை அசைத்து மத்தாலே ஒசைப்படுத்திய தயிரின் ஒலியையும் கேட்கவில்லையோ? பெண்களுக்கெல்லாம் தலைமையாய் இருப்பவளே ஸ்ரீ மந் நாராயணாவதாரமான கண்ணபிரானை நாங்கள் பாடா நிற்கச் செய்தும் நீ அப்பாட்டைக் கேட்டும் வைத்தும் இங்ஙகனே உறங்குவாயோ? மிக்க தேஜஸ்ஸையுடையவளே! நீயே எழுந்து வந்து கதவைத் திற.

கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு

மேய்வான் பறந்தன கான் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்

கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய

பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்.

இத்திருப்பவையின் உரை!

கிருஷ்ணனாலே மிகவும் விருமபத்தக்கப் புதுமை போன்றவளே! கீழ்திசைப்பக்கத்து ஆகசமானது வெளுத்தது; அன்றியும் எருமைகளானவை பனிப்புல் மேய்க்கைக்காக சிறு தோட்டங்களில் சென்று புக்கன திருவேங்கட யாத்திரை போலே போகையயே பிரயோஜனமாகக் கொண்டு போகின்ற மற்றுமுள்ள எல்லாப்பெண் பிள்ளைகளையும் போக ஒட்டாமல் தடுத்து உன்னை அழைத்தர்போருட்டு உன் மாளிகை வாசலில் வந்திர நின்றோம். எங்களுடன் கூடுவத்தர்க்காக எழுந்திரு; கண்ணபிரானுடைய குணங்களைப் பாடி அவனிடத்து பறையைப் பெற்று, குதிரை உருவம் எடுத்து வந்த கேசிஎன்னும் அசுரனுடைய வாயைக் கீண்டேரிந்தவனும் மலர்களை மாளச் செய்தவனுமான அத்தேவாதி தேவனை நாம் அணுகி அடிபணிந்தால் அவன், நமது குறைகளை ஆராய்ந்து இறங்கி அருள்வான்;

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்

மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

-ஆண்டாள்-

இத்திருப்பாவையின் உரை!

தூய மணிகளை உடைய, இருள் புக முடியாவண்ணம் சுற்றிலும் விளக்குகள் வைத்துக்கொண்டு, அவற்றில் போட்டுள்ள தூபம் வாசல் வரையில் கமழும் அளவிற்கு வைத்துக்கொண்டு உறங்கும் என் அருமை மாமன் மகளே, நீ விழித்துக்கொள். என் மாமன் பத்தினியான மாமியே யாம் இவ்வளவு கூறியும் விழித்திராத உன் மகள் ஊமையோ? செவிடோ? கண்ணனால் மந்திரபடுத்தப்பட்டாளோ? நேற்று இரவு சலங்கை ஒலி கேட்டதே. கண்ணனும் உன் மகளும் இரவு அடிப் பாடி கலைத்து இராவு முழுவதும் உறங்காமல் இப்பொழுது தான் உறங்குகின்றலோ உன் மகள். அவளை அனுப்பு சாக்ஷாத் வைகுண்டபதியான ஸ்ரீமன் நாராயணனே இப்பொழுது மதுசூதனனாக அவதரித்துள்ளான். அவனின் பெருமையை நாம் பாடிப் பரவசமும் பெருமையும் புண்ணியமும் அடைவோமாக.

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயி தான் தந்தானோ

ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

-ஆண்டாள்.

இத்திருப்பவையின் உரை!

நோன்பு நோற்று சுகாநுபவம் உடைய அம்மே! வாசற்கதவைத் திறவாதவர்கள் ஒரு வாய் சொல்லும் கொடுக்க மாட்டாரோ? நறு நாற்றம் வீசாநின்றுள்ள திருத்துழாய் மாலையை அணிந்துள்ள திருமுடியை உடைய நாராயணனும், நம்மால் மங்களாசாசனம் பண்ணப் பெற்றுப் புருஷார்த்தங்களை தந்தருள்பவனும் தர்மமே வடிவு கொண்டு வந்தாற் போன்றவனுமான இராமபிரானால் முன் ஒரு காலத்திலே விழுந்தொழிந்த கும்பகர்ணனும் தோல்வியடைந்து தனது பேருறக்கத்தை உனக்கே தான் கொடுத்தானோ? மிகவும் உறக்கம் உடையவளே! பெருதர்க்கரிய ஆபரணம் போன்றவளே!தெளிந்து வந்து கதவைத் திறந்திடு;

என ஆண்டாள் தன் தோழியை எழுப்புகின்றாள்.

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து

செற்றார் திறலழிய சென்று செருச் செய்யும்

குற்றம் ஒன்றுமில்லாத கோவலர்தம் பொற்கொடியே

புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட

சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்

இத்திருப்பாவையின் உரை!

கன்றாகிய பசுக்களினுடைய பல திறல்களைக் கறப்பவர்களும் சத்துருக்களினுடைய வலி அழியும்படி தாமே படையெடுத்துச் சென்று போர் செய்யுமவர்களும் ஒரு வகைக் குற்றமும் அற்றவர்களுமான கோபாலர்களுடைய குடியிற் பிறந்த பொன் கோடி போன்றவளே! புற்றிலிருக்கின்ற பாம்பின் படம் போன்ற அல்குலையும், கட்டில் இஷ்டப் படி திரிகின்ற மயில் போன்ற சாயலை உடையவளே! செல்வம் நிறைய உடைய பெண் பிள்ளையே! எழுந்து வருவாயாக; பந்து வர்க்கத்தை சேர்ந்தவர்களும் தோழிமார்களுமாகிய எல்லோரும் திரண்டு வந்து உனது திருமாளிகையின் முற்றத்தில் புகுந்து, கார்மேகவண்ணனான கண்ணபிரானுடைய திருநாமங்களைப் பாடச் செய்தேயும் பேருறக்கமுடைய நீ சலியாமலும் ஒன்றும் பேசாமலும் உறங்குவது என்ன பிரயோஜனத்திர்க்காகவோ? நாங்கள் அறியோம். தூக்கம் கழிந்து விழித்துக்கொள்.

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இறங்கி

நினைத்து முலை வழியே நின்று பால் சோர

நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்

பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி

சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்.

இத்திருப்பவையின் உரை!

இளம் கன்றுகளானவை பசியினால் அழ, அதற்க்கு பால் ஊட்டுவதாக நினைத்து பாலினை தன் முலையின் வழியாக ஆறு போல் பெருக்க, அதனால் வீடு முழுவதும் நனைந்து சேர் ஆகிவிட்டது. பனிகளானவை எங்கள் தலையில் விழும் அளவில் இருக்கின்றது. உன் வீட்டு வாசற் கதவு முழுவதிலும் பனி பற்றிக்கொள்ள, நீ உறங்குவதா? தேவி சீதையை அபகரித்துச் சென்றான் என்பதற்காக தெற்குப் பகுதியில் உள்ள இலங்கையின் அரசனான இராவணனை, சிந்தனைக்கு இனியனான இராமபிரான் சம்ஹாரம் செய்தான். அந்த ராமனே கண்ணனாகவும் அவதரித்துள்ளான். அவனைப் பாடுவதர்க்காகவாவது நீ விழித்துக் கொள் என் அருமைத் தோழியே!

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண போதரிக் கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ! பாவாய்! நீ நன் நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்

இத்திருப்பவையின் உரை!

பறவை உருவம் பூண்டு வந்த பகாசுரனுடைய வாயைக் கீண்டெரிந்தவனும் கொடியனான இராவணனை முடித்து அரக்கர் குலத்தை வேரோடு களைந்தெரிந்தவனுமான எம்பெருமானுடைய வீர சரிதங்களைப் பாடிக் கொண்டு சென்று எல்லாப் பெண் பிள்ளைகளும் நோன்பு நோற்பதற்காக குறிக்கப்பட்ட இடத்திற் புகுந்தனர்; சுக்ரோதயம் ஆகி ப்ருஹஸ்பதி அஸ்தமித்தான் அன்றியும் பறவைகளும் இறைத் தேடப்போன இடங்களில் ஆரவாரம் செய்தன; புஷ்பத்தின் அழகைக் கொள்ளைக் கொள்ளநின்ற கண்களை உடையவளே; பதுமை போன்றவளே! நீ, கிருஷ்ணனும் நாமும் கூடுகைக்கு வாய்த்த காலமாகிய இந்த நல்ல நாளில் கிருஷ்ணனுடைய குண சேஷ்டிதங்களைத் தனியே நினைத்துக் கிடக்கையாகிற கபடத்தை விட்டு எங்களுடன் கூடி உடம்பு வவ்வலிடும் படி குளத்திற்படிந்து ஸ்நானம் பண்ணாமல் படுக்கயிற் கிடந்து உறங்கா நின்றாயோ? ஆச்சர்யம்!

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோவில் சங்கிடுவான் போகின்றார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்

நங்காய் எழுந்திராய் நானாதாய் நாவுடையாய்

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்

இத்திருப்பாவையின் உரை!

உங்கள் வீட்டுப் புழைக்கடைத் தோட்டத்தில் இருக்கின்ற தடாகத்திலுள்ள செங்கழுநீர் பூக்களானவை விசாசிக்க, ஆம்பல் மலர்களின் வாய் மூடி போயிற்று; காவிப் பொடியில் தோய்ந்த வஸ்திரங்களையும் வெளுத்த பற்களையும் உடையராய் தபஸ்விகளாயிருந்துள்ள சந்யாசிகள், தமது திருக்கோயில்களைத் திறவுகோல்(சாவி) இட்டுத் திறக்கைக்காக போகா நின்றனர்; எங்களை முந்தி வந்து எழுப்புவதாக சொல்லிப்போன நங்கையே! சொன்ன படி எழுப்பவில்லையே! என்னும் வெட்கம் இல்லாதவளே; இனிய பேச்சு பேச வல்ல நாவைப் படைத்தவளே! சங்கையும் சக்கரத்தையும் தரியா நின்றுள்ள விசாலமான திருக்கைகளை உடையவனும் தாமரைப் போல் கண்ணானுமான கண்ணபிரானை பாடுகைக்கு எழுந்திரு!

எல்லே! இளம் கிளியே இன்னம் உறங்குதியோ

சில்லென்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்

இத்திருப்பவையின் உரை!

இளமை தங்கிய கிளி போன்றவளே! இஃது என்னே!

இத்தனைப் பெண் பிள்ளைகள் வந்த பின்பும் நீ உறங்குகின்றாயோ?

(என்று உணர்த்த வந்தவர்கள் கேட்க்க) பெண்காள் இதோ புறப்பட்டு

வருகிறேன் சிலுகு சிலுகென்று அழையாதேயுங்கள் (என்று

உறங்குபவள் கூற) இளங்கிளியே நீ வார்த்தைச் சொல்வதில் வல்லமை

உடையவள்; உனது கடுமையான சொற்களையும் உனது வாயையும்

நெடு நாளாகவே நாங்கள் அறிவோம்; (என்று உணர்த்த வந்தவர்கள் கூற)

இப்படிச் சொல்லுகின்ற நீங்கள் தான்பேச்சில் வல்லமை உடையவர்கள்,

அன்றேல் நீங்கள் சொல்லுகின்ற படி நான் தான் வல்லவளாய் ஆகக்

கடவேன்; நான் உங்களுக்கு செய்ய வேண்டுவது என்? என்று உறங்குமவள்

கேட்க, நீ சீக்கிரமாக எழுந்துவா; உனக்கு மட்டும் வேறு என்ன

உடையையாயிரா நின்றாய்? என்று உணர்த்த வந்தவள் கேட்க்க;

வரவேண்டியவர்கள் அனைவரும் வந்தனரோ? என்று உறங்குமவள்

கேட்க்க வந்தனர் அனைவரும். நீ எழுந்து வந்து எண்ணிப் பார்த்துக்

கொள் என்று உணர்த்த வந்தவள் கூற; என்னை எதற்காக வரச்

சொல்கிரீர்கள் என்று உறங்குபவள் கேட்க; குவலையாபீடமென்னும்

வலிய யானையை கொன்று ஒழித்தவனும், சத்ருக்களான கம்சாதிகளை மிடுக்கு அழிந்தவர்களாய் செய்து அருளின மாதவனைப் பாடுகைக்கு

என்று உணர்த்த வந்தவள் கூற உறங்குமவள் எழுந்து வந்தாள்.

15 பாசுரங்களாக தனது தோழிமார்களை எழுப்பிய ஆண்டாள் 16வது பாசுரத்திலிருந்து பெருமாளையும் அவரது பெருமைகளையும் பாடுகின்றாள்.

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய

கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண

வாசல் காப்பானே! மணிக் கதவம் தாள் திறவாய்

ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை

மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ

நேசநிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்.

இத்திருப்பவையின் உரை!

எமக்கு ஸ்வாமியாய் இருக்கின்ற நந்தகோபனுடைய திருமாளிகையை காக்குமவனே! த்வஜபடங்கள் விளங்கா நிற்க்கப்பெற்ற தோரண வாசலை காக்குமவனே! அழகிய கதவினுடைய தாழ்பாளை திறக்க வேண்டும்; இளமைத் தங்கிய இடைப் பெண்களாகிய எமக்கு ஆச்சாரிய செயல்களை உடையவனும் நீல மணி போன்ற நிறத்தை உடையவனுமான கண்ணபிரான் நேற்றே ஒலி செய்யும் பறையைத் தருவதாக வாக்களித்தான்; அவ்வெம்பெருமான் துயிலிநின்றும் எழுந்திருக்கும் படி பாடுகைக்காக பரிசுத்தைகளாய் அடியோங்கள் வந்திருக்கின்றோம்; சுவாமி, முதல் முதலிலே உமது வாயினால் மறுக்காதொழிய வேண்டும்; அன்றியும் கண்ணபிரான் பக்கலில் பரிவு உற்று இருக்கும் நிலைமையான கதவை நியே நீக்க வேண்டும்;

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்

எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே

எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்

அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த

உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா

உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்

இத்திருப்பவையின் உரை!

வஸ்தரங்களையே, தீர்த்தத்தையே, சோற்றையே, தருமமாக அளிக்கின்ற எமக்கு ஸ்வாமியான நந்தகோபரே! எழுந்திருக்க வேண்டும். வஞ்சிக் கொம்பு போல் மாதருக்கெல்லாம் முதன்மையானவளே! இக்குலத்திற்கு மங்கள தீபமாய் இருப்பவளே! எமக்குத் தலைவியான யசோதைப் பிராட்டியே உணர்ந்தெழு! ஆகாசத்தை இடைவெளி ஆக்கிக் கொண்டு உயர வளர்ந்து எல்லா உலகங்களையும் அளந்து அருளின தேவாதி தேவனே! இனிக் கண்வளர்ந்து அருளாமல் எழுந்திருக்க வேண்டும். சிவந்த பொன்னாலான வீரக் கழலை அணிந்துள்ள திருவடியை உடைய பலதேவா உன் தம்பி கண்ணனும் நீயும் எழுந்தருள வேண்டும்;

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்

நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்

கந்தம் கமழும் குழலி கடை திறவாய்

வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்

பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்

பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்

இத்திருப்பவையின் உரை!

(முன் பாசுரத்தில் நந்தகோபருடைய திருமாளிகையில் எழுப்பி, கண்ணன் வரவில்லை என்று தெரிந்த கோதையும் அவளது தோழிமார்களும் அடுத்து ராதையாகிய நப்பின்னையின் திருமாளிகில் தான் கண்ணன் இருப்பான் என்று எண்ணி அவள் மாளிகைக்குச் சென்று இப்பாசுரத்தை பாடுகின்றார்கள்)

தன்னால் வென்று தள்ளப் படுகின்ற மத யானைகளை உடையவனும், போர் களத்தில் முதுகு காட்டி ஓடாத புஜபலத்தை உடைவனுமான நந்தகோபாலனுக்கு மருமகளாய் இருக்கின்ற நப்பினை பிராட்டியே! பரிமளம் வீசா நின்றுள்ள கூந்தலை உடையவளே! தாழ்ப்பாளைத் திறந்திடு; கோழிகளானவை எல்லா இடங்களிலும் பரவி கூவுகின்றது பார். அன்றியும் குருக்கத்தி கொடிகளால் ஆகிய பந்தலின் மேல் உறங்குகின்ற குயிலினங்கள் பல முறை கூவியதைக் காண்; கிருஷ்ணனோடு விளையாடுகைக்கு உபகரணமான பந்து பொருந்திய கைகளை உடையவளே! உனது கணவனாகிய கண்ணபிரானுடைய திருநாமங்களை நாங்கள் பாடும் படியாக சீர்மைப் பொருந்திய உன் கைவிரல்களை ஒலிக்கும் படி நடந்து வந்து செந்தாமரைப் பூ போன்ற உன் கையினால் வளையல்கள் அணிந்திருக்கும் சப்தம் கேட்க்கும் படி எங்கள் மீது மகிழ்ச்சிக் கொண்டு தாழ்ப்பாளைத் திறந்தாயானால் மகிழ்ச்சி அடைவோம்.

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்

வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்

மைத்தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்

எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்

இத்திருப்பவையின் உரை!

நில விளக்கானவை நாற்புறமும் எரிந்து நிற்க, யானை தந்தங்களினால் செய்த கால்களை உடைய கட்டிலிலே, மெத்தென்று இருக்குமதாயும் அழகு, குளிர்த்தி, மேன்மை, பரிமளம், வெண்மை என்னும் (பஞ்ச – ஐந்து) ஐந்து குணங்களை உடைய படுக்கையின் மீதேறி, கொத்துக் கொத்தாக அலர்கின்ற பூக்களை அணிந்த கூந்தலை உடையளான நப்பின்னைப் பிரட்டியினுடைய திருமுலைத் தடங்களை தன்மேல் வைத்துக் கொண்டு பள்ளி கொள்கின்ற அகன்ற திருமார்பை உடைய பிரானே! வாய் திறந்து ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும். மையிட்டு அலங்கரிக்கப்பட்ட விசாலமான கண்களையுடைய நப்பின்னாய்! நீ உனக்குக் கணவனான கண்ணபிரானை ஒரு நொடிப் பொழுதும் படுக்கையை விட்டு எழுந்திருக்க ஒட்டுகிராயில்லை; க்ஷண காலமும் அவனைப் பிரிந்து தரித்து இருக்க மட்டுகிராயில்லை; ஆ! நீ இப்படி இருப்பது உனக்குத் தகுதி அன்று! இஃது உண்மை.

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்

செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்

செப்பென்ன மென் முலை செவ்வாய் சிறு மருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

- ஆண்டாள்

இத்திருப்பவையின் உரை!

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு துன்பம் வருவதற்கு முன்னமே எழுந்தருளி அவர்களின் நடுக்கத்தை நீக்கி அருள வல்ல மிடுக்கையுடைய கண்ண பிரானே!படுக்கையினின்றும் எழுந்தருள்; பக்தர்களை ரக்ஷிப்பதில் ஸ்திரமாக இருக்கும் தன்மையை உடையவனே; பகைவர் மண் உண்ணும் படியான வலிமையை உடையவனே! சத்ருக்களுக்கு பயமாகிற ஜுரத்தை கொடுக்க வல்ல பரிசுத்த ஸ்வபாவனே! நீ துயில் எழாய்; பொற் கலசம் போன்ற விரஹம் பொறாத முலைகளையும் சிவந்த வாயையும் நுண்ணிதான இடையையும் உடைய நப்பினைப் பிராட்டியே! ஸ்ரீமஹாலக்ஷ்மியே! துயில் எழாய்; துயிலெழுந்த பின்பு நோன்புக்கு உபகரணமான ஆலவட்டத்தையும் விசிறியையும் கண்ணாடியையும் உனக்கு வல்லபனான கண்ணபிரானையும் கொடுத்து, விரஹத்தால் மெலிந்த எங்களை இந்த க்ஷணத்திலேயே நிராட்டக் கடவாய்!

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்

மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்

ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்.

இத்திருப்பாவையின் உரை!

சுரந்த பாலை ஏற்றுக்கொண்ட கலங்களானவை எதிரே பொங்கி மேலே வழியும் படியாக இடைவிடாமல் பாலைச் சுரக்கின்ற பெண்களும் பேதைகளும் அணைத்துக் கொள்ளும்படி நற்சீலத்தை உடைய பெரிய பசுக்களை விசேஷமாக படைத்துள்ள நந்தகோபருக்குப் பிள்ளையானவனே! நீ திருப்பள்ளி உணர வேண்டும். அடியாரைக் காப்பதில் ச்ரத்தையுடையவனே!பெருமைப் பொருந்தியவனே! இவ்வுலகத்தில் ஆவிர்பவித்த தேஜோ ரூபியானவனே! துயில் எழாய்;உன் விஷயத்தில் தங்கள்வலிமாண்டு உபயோகம் அற்ற வலிவை உடையராய் உன் மாளிகை வாசலில் கதியற்று வந்து உன் திருவடிகளில் சரணாகதி பண்ணிக் கிடப்பதுப் போல் நாங்கள் உன்னைத் துதித்து உனக்கு மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு உன் திருமாளிகை வாசலில் வந்து சேர்ந்தோம்;

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே

சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்

கிண்கிணி வாய் செய்த தாமரைப் பூ போலே

செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ

திங்களும் ஆதித்தனும் எழுந்தார் போல்

அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்

எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்

இத்திருப்பவையின் உரை!

அழகியதாய் விசாலமாய் பெரியதாயுள்ள பூமியில் அரசாட்சி செய்த ராஜாக்கள் தங்களுடைய அஹங்காரம் அடங்கி வந்து உன் சிம்மாசனத்தின் கீழ் திரள்திரளாக இருப்பது போலே நாங்களும் உன் இருப்பிடத்தேற விடைக் கொண்டு கிட்டினோம்; கிண்கிணியின் வாய்போலிரா நின்ற பாதிவிகஸிதமான செந்தாமரைப் பூ போன்ற சிவந்த திருக்கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் மேலே விழிக்க மாட்டாயோ? சந்திரனும் சூரியனும் உதித்தார் போல் அழகிய திருக்கண்கள் இரண்டிலும் எங்களைக் கடாக்ஷித்து அருள்வாயாகில் எங்கள் பக்கலில் உள்ள சாபம் கழிந்துவிடும்.

(ஆண்டாளுக்கும் பிற தோழிகளுக்கும் என்ன சாபம் நேர்ந்து விடப் போகின்றது? எதற்காக எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்! என்று கூறுகின்றாள் என்றால், அருகாமையில் உள்ள வீடுகளில் உள்ள மாமிகள் எல்லாம் கண்ணனிடம் பேசுவது, பழகுவது கூடாது என்று கூறியுள்ளனர். அதனையே சாபம் என்று எண்ணி இவ்வாறு கூறுகின்றாள்)

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்

கோயில் நின்று இங்கணே போந்தருளி கோப்புடைய

சீரிய சிங்காசனத்தில் இருந்து யாம் வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்

இத்திருப்பவையின் உரை!

மழைக் காலத்தில் மலையிலுள்ள குஹையிலும் பேடையும் தானும் ஒரு வஸ்து எனலாம்படி ஒட்டிக்கொண்டு கிடந்து உறங்கா நின்ற வீர்யமாகின்ற சீர்மையை உடைய சிங்கமானது உணர்ந்தெழுந்து நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து ஜாதிக்கு உரிய பரிமளமுள்ள உளைமயிர்களானவை சிலும்பும்படி நாற்புறங்களிலும் புடைப் பெயர்ந்து அசைந்து சரீரத்தை உதறி சோம்பல் முறித்து கர்ஜனை பண்ணி வெளிப் புறப்பாடு வருவது போல் காயாம் பூ போன்ற நிறத்தை உடைய பிரானே! நீ உன்னுடைய திருக்கோயிலிநின்றும் இவ்விடத்தேற ஆஸ்தானத்தில் எழுந்தருளி அழகிய சந்நிவேசத்தை உடைய லோகோத்தரமான சிம்மாசனத்தின் மீது எழுந்தருளி இருந்து நாங்கள் வந்த காரியத்தை விசாரித்து கிருபை செய்ய வேணும்;

(இத்திருப்பவையில் சிம்மத்தை உவமைக் கூறுகின்றாள் ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே இருந்த ஆண்டாள் எவ்வாறு சிம்மத்தை பார்க்க இயலும். அதனை வைத்து எவ்வாறு உவமைக் கூறுகின்றாள் என்றால், தன் தந்தை பெரியாழ்வார் ஆண்டாளை திருவரங்கம் அழைத்து வரும்போதெல்லாம் நம் திருவரங்கனின் கஜ சிம்ம கதி வீரௌ என்னும் படியான நடையினைக் கண்டுள்ளாள். எனவே அரங்கனின் சிம்ம கதியை பார்த்து, சிம்மம் இவ்வாறு தான் நடக்கும் என்று கற்பனை செய்து சிம்மத்தை உவமைக் கூறினாள்)

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திரல் போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி

கன்று குணிலாய் எறிந்தாய் கழல் போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்

இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்

இத்திருப்பவையின் உரை!

அன்று மகாபலி சக்கரவர்த்திக்கு அறிவு புகுட்ட வாமனனாக வந்து த்ரிவிக்ரமனாக மாறி முன்று உலகங்களையும் அளந்தாய்; உன்னுடைய அந்த திருவடிகள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவென போற்றுகின்றோம்; சீதா பிராட்டியைக் களவு கண்ட இராவணன் இருக்கும் இடத்தில் எழுந்தருளி அவனுடைய அழகிய பட்டணமான லங்காபுரியை அழித்தருளியவனே! உன்னுடைய மிடுக்கு பல்லாண்டு வாழ்கவென போற்றுகின்றோம்;சகடாசுரன் அழியும் படி சகடத்தை உதைத்தவனே! உன்னுடைய கீர்த்தியானது போற்றி;கன்றாய் நின்ற வத்சாசுரனை எறிதடியாகக் கொண்டு கபித்தாசுரன் மீது எறிந்தவனே! உன்னுடைய திருவடிகள் போற்றி; அன்று ஆயர்களுக்காக கோவர்த்தன மலையை குடையாய் பிடித்துக் காத்தவனே! உன்னுடைய சௌசீல்ய சௌலப்யாதி குணங்கள் போற்றி; பகைவரை ஜபித்து த்வேஷத்தை அழிக்கின்ற உனது திருக்கையில் உள்ள வேல் வாழ்கவென போற்றுகின்றோம்; என்று இப்படி பலவாறாக மங்களாசாசனம் செய்து கொண்டு, உன்னுடைய வீர்யங்களையே புகழ்ந்து கொண்டு, அடியோம் இப்போது பறை கொள்வதற்காக உன்னிடம் விடைக் கொண்டோம். கிருபை செய்தருள்.

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர

தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்.

இத்திருப்பவையின் உரை!

தேவகி பிராடியாகின்ற ஒருத்திக்குப் பிள்ளையாய் அவதரித்து, அவதார காலமாகிய அந்த ஒரு இரவினிலேயே திருவாய்பாடியிலே நந்தகோபரின் மாளிகைக்கு வந்து சேர்ந்து எஷோதைப் பிராட்டியாகிய ஒருத்தியிடம் ஏகாந்தமாக வளருங்கால் கம்சன் அங்ஙனம் வளர்வதைப் பொருக்காதவனாய் இவனை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று தீங்கினை நினைத்த கம்சனுடைய எண்ணத்தை வீணாக்கி அக்கஞ்சனுடைய வயிற்றில் ‘நெருப்பு’ என்னும் படி நின்ற சர்வாதிகனான எம்பெருமானே! உன்னிடத்தில் புருஷார்த்தத்தை யாசியா நின்று கொண்டு வந்தோம்; எங்களுடைய மனோரதத்தை நிறைவேற்றித் தருவாயாகில் பிராட்டி விரும்பத்தக்க சம்பத்தையும் வீர்யத்தையும் நாங்கள் பாடி உன்னைப் பிரிந்து பாடுகின்ற துயரம் நீங்கி மகிழ்ந்திடுவோம்

(ஆண்டாள் பாசுரத்தினிலே தேவகி மகனாய் பிறந்து எசோதை மகனாய் வளர்ந்து என்று கூறலாமே! என்றால், கம்சன் கண்ணனைக் கொள்வதற்கு அரக்கர்களை அனுப்பி இருக்கின்றான். ஆதலால் தேவகி மகனாய் பிறந்து என்றாலே கண்ண பிரான் தான் என்று கம்சன் தெரிந்து கொள்வான் என்பதனால் ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர என்று கூறினாள். ஆனால் மனதிற்குள்ளே தேவகி மகனாய் பிறந்து எசோதை மகனாய் வளர்ந்து என்றே கூறினாள்)

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே

சாலப் பெரும் பரையே பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்

இத்திருப்பவையின் உரை!

அடியார் பக்கலில் வியாமோஹமுடைய திருமாலே! நீல மணி போன்ற வடிவை உடைய மணிவண்ணனே! பிரளய காலத்தில் ஆலந்தளிரில் பள்ளி கொள்பவனே! மார்கழி நீரட்டத்திர்க்காக உத்தமபுருஷர்கள் அனுஷ்ட்டிக்கும் முறைகளில் வேண்டியவற்றை கேட்கிறாயாகில் அவற்றைச் சொல்லுகின்ற்றோம்; பூமி நடுங்கும் படி ஒலி செய்யக் கடவனவும் பால் போன்ற நிறமுடைய உன்னுடைய ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை ஒத்திருப்பனவுமான சங்கங்களையும் மிகவும் இடமுடைய, மிகவும் பெரியதான பறைகளையும் மங்கள தீபங்களையும் த்வஜங்களையும் மேற்கட்டிகளையும் ப்ரசாதித்து அருள வேண்டும்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாக

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழி வார

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்.

இத்திருப்பவையின் உரை!

தன்னை அடிபணியாதவர்களை வெல்லும் குணங்களை உடைய கண்ண பிரானே! உன்னை வாயாரப் பாடி, உன்னிடத்து யாம் வேண்டுகின்ற பறையைப் பெற்று பின்னும், நாங்கள் பெரும் படியான சம்மானமாவது நாட்டில் உள்ளவர்கள் புகழும்படியாக கையில் அணியும் ஆபரணமான சூடகமும், தோள்வளையும் காதுக்கு இடும் ஆபரணமான தோடும், கர்ணப்பூவும், பாத கடகமும்,என்று சொல்லப்படுகின்ற இவ்வாபரணங்களும் மற்றும் பல ஆபரணங்களும், சேலைகளும் நாங்கள் உடுத்திக் கொள்வோம்; அதற்குப் பின்பு, பாற் சோறானது (க்ஷீரான்னம்) மறையும் படியாக நெய் பரிமாறி, அந்த நெய் முழங்கையால் வழியும் படியாக உண்டு, நீயும் நாங்களுமாக கூடி இருந்து குளிர வேண்டும்.

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை

சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே

இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்

இத்திருப்பவியின் உரை!

குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா நாங்கள் பசுக்களின் பின்னே போய் காடு சேர்ந்து சரீர போஷனமே பண்ணித் திரியுமவர்களாயும் சிறிதளவும் அறிவில்லாத இடைக்குலத்தில் உன்னை பெறுவதர்க்குத் தக்க புன்னியமுடையவர்கள் ஆயும் இரா நின்றோம்; ஸ்வாமியான கண்ண பிரானே! உன்னோடு எங்களுக்கு உண்டான உறவானது இங்கு உன்னாலும் எம்மாலும் ஒழிக்க ஒழிய மாட்டாது, லோகமரியாதை ஒன்றும் அறியாத சிறு பெண்களான நாங்கள் உன்னை ப்ரீதியினாலே சிறிய பேராலே அழைத்ததைக் குறித்தும் ஆஷ்ரிதவத்ஸலனான நீ கூபிக்காமல் பறை தந்து அருள வேண்டும்.

சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!

-ஆண்டாள்.

இத்திருப்பாவையின் உரை!

கண்ணபிரானே! விடியற் காலத்திலேயே இவ்விடத்தேற வந்து உன்னைத் தெண்டனிட்டு உனது அழகிய திருவடித் தாமரைகளை மங்களாசாசனம் பண்ணுவதற்குப் ப்ரயோஜனத்தை கேட்டருள வேண்டும்; பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக் குலத்தில் பிறந்த நீ எங்களிடத்தில் அந்தரங்க கைங்கரியத்தை திருவுள்ளம் பற்றாதொழிய ஒண்ணாது, இன்று கொடுக்கப் படுகின்ற இப்பறையைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம்; காலம் உள்ளளவும் உன்னோடு எவ் அவதாரங்களிலும் உன்னோடு உறவு உடையவர்களாகக் கடவோம்; உன்னக்கு மாத்திரமே நாங்கள் அடிமை செய்யக் கடவோம்; எங்களுடைய இதர விஷய விருப்பங்களை தவிர்த்து அருள வேண்டும்;

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை

திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி

அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்

பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

-ஆண்டாள்

இத்திருப்பாவையின் உரை!

கப்பல்களை உடைய திருப்பாற்கடலை தேவர்களுக்காகக் கடைந்த சிய:பதியான கண்ணபிரானை சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையும் உடைய ஆய்ச்சிகள் அடைந்து வணங்கி அத்திருவாய்ப்பாடியில் தங்கள் புருஷார்தத்தைப் பெற்ற அந்த வ்ருத்தாந்தத்தை அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த பசுமைப் பொருந்திய தாமரை மலர்களினால் ஆன குளிர்ந்த மாலையை உடைய பெரியாழ்வாருடைய திருமகளான ஆண்டாள் அருளிச் செய்த திரள் திரளாக அனுபவிக்க வேண்டிய தமிழ்மாலையாகிய இம்முப்பது பாசுரங்களையும் தப்பாமல் இந்நிலத்தில் இவ்வண்ணமே ஓதுமவர்கள் பெரிய மலை போன்ற நான்கு திருத் தோள்களை உடையவனும் ஐஸ்வர்யத்தை உடையவனும் ச்ரிய:பதியுமான எம்பெருமானாலே எவ்விடத்தும் அவனுடைய கிருபையைப் பெற்று பரம ஆனந்தசாலிகளாவர்.

இத்துடன் திருப்பாவை உரை முற்றிற்று.. இனி வாழி திருநாமம்..

வாழி திருநாமம்

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்

சோதி மணி மாடம் தோன்றும் ஊர்

நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர்

நான்மறைகள் ஓதுமூர்

வில்லிபுத்தூர் வேதக் கோனூர்

பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்

வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்

ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு.

திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே

பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே

உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே

மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே

வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!

இவ்வாழி திருநாமத்தின் விளக்கம்,

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமை!

கோதை பிறந்த ஊராகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிந்தனாகிய பெருமாள் வாழுகின்றான்; அவ்வாறு பெருமை வாய்ந்த அவ்வூரிலே உள்ள க்ருஹங்களில் உள்ள மணிமாடங்களில் ப்ரகாசமான விளக்குகள் ஏற்றி வைக்கப் பட்டுள்ளன; நீதியைக் கடைபிடித்தல் என்பது வைணவ சம்ப்ரதாயத்தில் ஒன்று; அவ்வாறு சிறந்த நீதியை கடை பிடிக்கும் சிறந்த பக்தர்கள் வாழும் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்; நான்கு மறைகள் எனப்படும் ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் தினமும் ஓதப்படும் ஊர். வில்லிபுத்தூரில் வேதாத்யயனம் பண்ணிய பல பண்டிதர்கள் உள்ளனர். அம்மண்ணை மிதித்தாலே நம் இதற்க்கு முன் செய்த பாபங்கள், செய்துக் கொண்டிருக்கும் பாபங்கள், செய்யப் போகும் பாபங்கள் ஆகிய அனைத்தும் ஒழிந்து, பரமனாகிய நாராயணனின் திருவடியினை நாம் அடையலாம். கோதை கூறிய முப்பது திருப்பாவையையும் அறியாத மானிடரை பூதேவி சுமக்க மாட்டாள். அவ்வாறு சுமப்பது வம்பு. (ஐயைந்தும் =5×5=25 ஐந்தும் 25+5=30)

ஆண்டாளின் பெருமை!

திருவாடிப்பூர நன்னாளிலே பிறந்த கோதை வாழ்க!

திருப்பாவை முப்பதினை உலககிற்கு அளித்தவள் வாழ்க!

பெரியாழ்வார் என்னும் விஷ்ணுசித்தர் கண்டெடுத்த பெண்பிள்ளை வாழ்க!

ஸ்ரீபெரும்புதூர் மாமுனி எனப்படும் உடையவரின் தங்கையாகிய ஆண்டாள் வாழ்க!

நூற்றி நாற்பத்தி மூன்று பாசுரங்கள் சொன்னவள் வாழ்க!

அரங்கனை தமக்குரியவனாக ஆக்கிக்கொண்டவலள் வாழ்க!

மல்லி என்னும் ஸ்ரீவில்லிபுத்தூர் வளம் பெற்று வாழ்க!

வன்மை பொருந்திய என்றைக்கும் இளமைத் தங்கிய நகரமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்த மங்கையின் தாமரைத் திருவடிகள் என்றென்றும் வாழ்க!

இங்ஙனம்

அடியாள்

கிருஷ்ணப்ரியா.

Thiruppavai?wtmwzeamzmn?wk2w55qezwo?wtykgjezoze

திருப்பாவை
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

நிராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்!

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே!! நமக்கே பறைத் தருவான்

பாரோர் புகழ படிந்தேலோர் எம் பாவாய்!

-ஆண்டாள்

திங்கள் – மாதம்

மதி – சந்திரன்

செங்கண் – செம்மை + கண்

இத்திருப்பவையின் உரை

செல்வம் நிறைந்த திருவைப்படியில் கைங்கர்ய சம்பத்தையும் இளம் பருவத்தையும் உடைய பெண்காள்! விலக்ஷணமான பூஷனங்களை அணிந்துகொள்பவர்களே! மாதங்களில் சிறந்த மாதமாகிய மார்கழி மாதமும், பூர்ண சந்திரோதயத்தை உடைய சுக்ல பக்ஷத்திய நன்னாளும் நமக்கு வாய்த்திருக்கின்றன; கண்ணனை கொடிய அரக்கர்களிடமிருந்து காக்க வேண்டி எப்பொழுதும் கூர்மையான வேல் ஏந்திய நந்தகோபன் மற்றும் அழகிய கண்கள் உடைய யசோதையின் சிங்கக்குட்டியாய் இருப்பவனும், நம்மைக் ரக்ஷிக்க வேண்டி ஒரு கண்ணை சந்திரனாகவும், அரக்கர்களை போக்க வேண்டி மற்றொரு கண்ணை சூரியனாக வைத்துக்கொண்டும் இருப்பவனான கிருஷ்ணனே சாக்ஷாத் நாராயணனின் அவதாரம்.(கிருஷ்ணன் என்று நேரடியாக சொன்னால் அடுத்த வீட்டு மாமி திட்டுவார் என்பதனால் பெருமாளை நோக்கி வேண்டுவதைப் போல் அண்டல் கண்ணனை வேண்டினாள்) அவனை சேவித்து நாமும் பயன் அடைவோம்; எனவே எல்லோரும் வாருங்கள், நிராடி வருவோம்!

கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்

கன இருள் அகன்றது காளையம் பொழுதாய்

மது விருந்தொழுகின மாமலரெல்லாம்

வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி

எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த

இருங்களித்தீட்டமும் பிடியொடும் முரசும்

அதிர் தலில் அலைக் கடல் போன்றுள தெங்கும்

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!

-தொண்டரடிப்பொடி ஆழ்வார்

கதிரவன் – சூரியன்

குணதிசை – கீழ் திசை

வானவர் அரசர் – தேவர்கள்

எதிர் திசை – தெற்கு திசை

களிறு – ஆண் யானை

பிடி – பெண் யானை

முரசு – வாத்தியம்

இத்திருப்பள்ளிஎழுச்சியின் உரை

அரங்கராஜனே, சூரியனானவன் கிழக்கு திக்கில் உதித்துவிட்டான். இரவு பொழுதின் அடர்ந்த இருள் அகன்று காலைப் பொழு  புலர்ந்து விட்டது. சிறந்த மலர்களெல்லாம் விகாசம் அடைந்துவிட்டது.  தேவர்களும், அரசர்களும் திரண்டு உன் திருக்கண்கள் நோக்கிய தெற்கு திக்கில் கூடிவிட்டனர்.  ஆண் யானைகளும், பெண் யானைகளும், வாத்தியங்களும் சேர்ந்து ஒலிக்கின்ற போது அலைகளை உடைய கடலை ஒத்திருந்தது. எனவே இனியும் பள்ளியில் (சயனத்தில்)  இருக்கலாகாது. நீ விரைவில் எழுந்து அருள்வாயாக.

ஏன் பள்ளி கொண்டாய் அரங்கநாதா?

பட்டாபிராமனாய் அரசாண்டதால் அலுத்துப் போய் பள்ளி கொண்டாயா?

பாமர மக்களுக்கு அருள் சாதித்து பள்ளி கொண்டாயா?

பிரமனை நாபிக் கமலத்தில் தாங்குவதற்காக பள்ளி கொண்டாயா?

பீதாம்பரத்தின் வெப்பம் தாளாமல் பள்ளி கொண்டாயா?

புருஷோத்தமனாய் திருவெள்ளறையில் சேவை சாதிப்பதனால் திருவரங்கத்தில் பள்ளி கொண்டாயா?

பூ போல் தாமரை திருக்கண்கள் அயர்ந்ததனால் பள்ளி கொண்டாயா?

பெரியாழ்வாரின் செல்ல மகள் ஆண்டாளுடன் பள்ளி கொண்டாயா?

பேயாழ்வார் முதலிய ஆழ்வார்களை ஆட்கொண்ட மகிழ்வில் பள்ளி கொண்டாயா?

பைந்தமிழில் பதின்வரால் பாசுரம் பாடப் பட்ட பெருமிதத்தில் பள்ளி கொண்டாயா?

பொறுமையே ஸ்வரூபமாக உடைய திருமகளின் நாயகனாக பள்ளிகொண்டாயா?

போராது கடாக்ஷித்து பள்ளி கொண்டாயா?

பௌருஷர்த்தத்தின் உவமை ஆதலால் பள்ளி கொண்டாயா.?

அடியாள்

கிருஷ்ணப்ரியா